மத்திய அரசு செய்துவிட்டது. இந்த திராவிட மாடல் செய்யுமா?.. ஹெச்.ராஜா.!
BJP H Raja speech about petrol and diesel price
மத்திய அரசு செய்துவிட்டது. திராவிட மாடல் செய்யுமா.? என பாஜக மூத்த தலைவர் எச்ச ராஜா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22, டீசல் லிட்டருக்கு ரூ.6.70ம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய அரசு செய்து விட்டது. இந்த திராவிட மாடல் செய்யுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP H Raja speech about petrol and diesel price