#நாகை:: பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜகவினர் சாலை மறியல்..!!
BJP road block against Congress screened BBC documentary
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படத்தை பிபிசி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இந்தியாவில் மட்டும் சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நாகை அபிராமி சன்னதி திடலில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பு மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இதனை காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் கூடி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் தலைமையிலான அக்கட்சியினர் ஆவணப்படத்தை திரையிடக்கூடாது என காங்கிரஸ் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்த நாகை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட அதிரடி பாதையினர் குவிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திரையிடப்பட்ட ஆவணப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் பாரத் மாதா கி ஜே எனவும், காங்கிரஸ் ஆர் மகாத்மா காந்தி புகழ் ஓங்குக எனவும் முழக்கமிட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை கலைந்து செல்லுமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடமும் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனை எடுத்து நாகை துணை கண் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மீண்டும் பேச்சு நடத்தி சமாதானம் செய்து இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தார். நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
English Summary
BJP road block against Congress screened BBC documentary