தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்திருப்பது பெரிய சாதனை - வானதி சீனிவாசன்!
BJP to retain power for the third consecutive term Vanathi Srinivasan
தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்திருப்பதில் மிகப்பெரிய சாதனை எனவும் கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பாஜகவுக்கு நீண்ட அனுபவம் உள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இது குறித்து வானத்து சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது வெற்றி என்பது சாதாரணமானதல்ல வரலாற்று வெற்றி.
இந்திய சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளில் நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவால் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது. இந்திய அரசியலில் 17 ஆண்டுகள் பெரும் செல்வாக்குடன் பலம் வந்த இந்திரா காந்திகள் கூட தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.
1977ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்திரா காந்தி தான் போட்டியிட்ட தொகுதியிலே தோற்றுப் போனார். இந்திரா காந்தி மறைவுக்குப் பின் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நான் இருக்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த ராஜீவ் காந்தியால் இரண்டாவது முறை ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.
1989 லிருந்து இந்தியாவில் கூட்டணி ஆட்சி காலம் தொடங்கியது. 2014 ல் 282, 2019ம் ஆண்டு 303 என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தனி பெரும்பான்மை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது பெரிய சாதனை என்று கூறியுள்ளார்.
English Summary
BJP to retain power for the third consecutive term Vanathi Srinivasan