மிக்சர் சாப்புடுறீங்களா சூர்யா? கள்ளச்சாராய விவகாரத்தில் ப்ளூ சட்டை மாறன் கிழி!
Blue Sattai Maaran And ADMK Condemn to Tamil Actors
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் 80 க்கும் மேற்பட்டோர் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் பிரதான எதிர் கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்டவைகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் என்ன அநீதியான சம்பவங்கள் நடந்தாலும் குரல் கொடுத்து வந்த புரட்சி போராளி நடிகர் சூர்யா, சத்யராஜ், கார்த்தி, சித்தார்த் போன்ற நடிகர்கள் இந்த விவகாரம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை என்று அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது X பக்கத்தில், வாயை பொத்திக்கொண்டு இருப்பது போல ஒரு மீம்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து, "கமல், சூர்யா, சத்யராஜ்.. Now.உண்மை…" என்று பதிவிட்டுள்ளார்.
இதனை அதிமுகவை சேர்ந்த பலரும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக ஐடி விங்க் ராஜ் சத்யன் "திமுக ஆட்சியில் இவங்களுக்கு பாயிண்டே வராது…" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் பலியான விவகாரம் குறித்து தமிழ் நடிகர்கள் எப்போது வாய் திறப்பார்கள் என்று, பிரபல திரை விமர்சகர் பிரஷாந்த் ரங்கசுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் சமூகவலைத்தள பதிவில், "இந்த கோவன் கோவன்னு ஒரு போராளி கொஞ்ச வருசம் முன்னாடி சாராயத்துக்கு எதிரா சாட்ட வீசிட்டு இருந்தாப்டி . அவர பார்த்தீங்களா எங்காச்சும் ?
தமிழ் நடிகர்கள் எப்போது சமூக அநீதி கண்டு நெஞ்சை புடைப்பார்கள் ? அ.தி.மு.க ஆட்சி இருந்தால் , பா.ஜ.க தப்பு செய்தால்...
தி.மு.க வ எதிர்த்தா அஸ்திவாரம் ஆட்டம் கண்டிடும்னு தெரியும் , அதனால இப்ப இல்ல , எப்ப தி.மு.க ஆட்சி இருந்தாலும் அந்த வாய்கள் திறக்கவே திறக்காது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ப்ளூ சட்டை மாறன் தனது X பக்கத்தில் Suriya in 2017 என்ற பதிவும் வைரலாகி வருகிறது.
English Summary
Blue Sattai Maaran And ADMK Condemn to Tamil Actors