பரபரப்பு! சென்னை விமான நிலையத்தில் கருப்பு பை! அலறிய மக்கள்..அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் பை ஒன்று  நீண்ட நேரமான இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இலட்சக்கான மக்கள் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் 1 வது முனையம் பயணிகள் புறப்பாடு பகுதியில் ட்ராலி ஒன்றில் கருப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக கேப்பாரற்று  கிடந்ததை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பையில் வெடிகுண்டு அல்லது போதைப்பொருள்கள் ஏதேனோ இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டதால்  இதுகுறித்து  மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு வந்து வெடிகுண்டு நிபுணர்கள் ட்ராலியை தனிமைப்படுத்திவிட்டு வெடிகுண்டு பரிசோதனை செய்தனர். இதற்கிடையில் வாலிபர் ஒருவருடன் இளம் பெண்ணுடன் அங்கு வந்து பையை எடுக்க முயன்றுள்ளனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்து விசாரணை செய்தனர்.

பின்னர் அவர்கள் தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல வந்த அவர்கள் மறதியாக பையை ட்ராலியில் வைத்துவிட்டு விமான நிலைய வளாகத்துக்குள் ஓட்டலில் சாப்பிட சென்று விட்டதாக கூறியுள்ளனர். அந்தப் பையை  அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த பொது வெறும் துணிகளை தவிர வேறு எதுவும் ஒன்றும் இல்லை. இரு பயணிகளும் இது தொடர்பாக அதிகாரியிடம் வருத்த தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb test at Chennai airport


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->