காலையிலேயே முதல்வர் ஸ்டாலின் வீட்டை அதிர்ச்சியாக்கிய சம்பவம்.. இளைஞர் கைது.!
Bomb thread to MK Stalin house kanniyaakumari man arrested
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினின் வீடு உள்ளது. அவரது அரசு பங்களாவை தவிர்த்து தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார்.
அப்போது பேசிய அந்த நபர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு திடீரென தனது போனை கட் செய்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சரின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் அதே நேரத்தில் போன் செய்த நபர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/crime police 21-xrya8.png)
இந்த விசாரணையில் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் பொய்யான தகவல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தவரின் எண்ணை வைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரை பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எதற்காக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர் .
English Summary
Bomb thread to MK Stalin house kanniyaakumari man arrested