சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Bomb threat sent to Chennai airport via email
சென்னை விமான நிலைய இமெயில் முகவரிக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதில் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கப் போகிறது என்று குறிப்பிட்ட மர்ம நபர் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கும் நபர் ஒருவரின் உடையில் வெடிகுண்டு உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அந்த மர்ம நபர் பயணிக்கும் விமானத்திற்கு பேராபத்து உள்ளது என அந்த ஈமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும், க்யூ பிரிவு போலீசாருக்கும், தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அவசர தகவல் அனுப்பினர். சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் உடனடியாக நடத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஈமெயிலில் சென்னை விமான நிலையத்தில் தான் குண்டு வெடிக்கும் என குறிப்பிடப்படவில்லை பொதுவாக விமானத்தில் குண்டு வெடிக்கும் என மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிநாடு செல்லும் பயணி ஒருவரை தடுத்து நிறுத்தியதற்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Bomb threat sent to Chennai airport via email