இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடிக்கும்! தபால் நிலையத்தை களேபரம் செய்தவர் கைது!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று கடிதம் முலம் தபால் நிலையத்திற்கு வந்த பார்சலில் வெடிகுண்டு இருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அதிர்ந்து போன தபால் நிலைய ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்

அதன் பேரில் போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியோடு தபால் நிலையத்தை அலசி ஆராய்ந்ததில் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் தபால் நிலைய பணிகள் வழக்கம் போல் இன்று நடைபெற தொடங்கின.

இருப்பினும் அந்த கடிதத்தை அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது? எதற்காக அனுப்பப்பட்டது? என்பது குறித்து தபால் துறையினர் உதவியுடன் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அசோக் (45) என்ற நபரை போலிஸார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்தவர் என்பதும், நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அவரை பணியில் இருந்து நீக்கியதால் விரக்தியில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும் தெரியவந்தது. அவரை கைது செய்த வடசேரி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb threat to post office arrested in nagarkovil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->