தமிழகத்தில் பரபரப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb threat to the house of Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->