கடலூர்! போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய 4 பேர் கைது.!
Bombing on police when Robbery averted
கடலூரில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய 4 பேரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப்பணிகள் தானே புயல் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள், காப்பர் கம்பிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.
இதனை காவலாளிகள் இரவு, பகல் என்று கண்காணித்து வந்தனர். ஆனாலும் மர்ம கும்பல் யாருக்கும் தெரியாமல் தொழிற்சாலைக்குள் புகுந்து அடிக்கடி இரும்பு பொருட்களை திருடி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியின் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மர்ம கும்பல் போலீசார் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
English Summary
Bombing on police when Robbery averted