சாராயத்துக்கே ஆஃபர் போட்ட கள்ளச்சாராய வியாபாரி...அலைமோதும் கூட்டம்..! - Seithipunal
Seithipunal


கள்ளச்சாராய வியாபாரி ஒருவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூகுள் பே மூலம் இரண்டு லிட்டர் கள்ளச்சாராயம் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் என புதிய ஆஃபரை அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பிரம்மகுண்டம் கிராமத்தில் துரைசாமி மகன் வெங்கடேசன் என்பவர் அப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரம் செய்து வருகிறார். மது பிரியர்களின் கவனத்தை ஈர்க்க கள்ளச்சாராய வியாபாரியான வெங்கடேசன் புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்திலேயே முதன்முதலாக ஆன்லைன் மூலம் கள்ளச்சாராய வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில், கூகுள் பே மூலம் 2- லிட்டர் கள்ளச்சாராயம் வாங்குபவர்களுக்கு அரை லிட்டர் இலவசம் என்று அறிவித்திருந்தார். இதனால், அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கள்ளச்சாராய வியாபாரத்தில்  மது பிரியர்களுக்கு ஒரு கள்ளச்சாராய வியாபாரி ஆஃபர்களை அறிவித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bootlegger offer for alchocal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->