கொடூரம்! பிறந்து ஒரே நாளான பச்சிளம் குழந்தை! வயல்வெளியில் மீட்பு! - Seithipunal
Seithipunal


கடலூரில் பிறந்த பச்சிளம் குழந்தையை வயல்வெளியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ரெட்டிகுப்பம் வயல்வெளி பகுதியில் நேற்று மதியம் பிறந்த ஒரே நாளான ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வயல்வெளி அருகே பிறந்த ஒரே நாளான பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெரில் அங்கு வந்த போலீசார் குழந்தையை பார்வையிட்டு இதனையடுத்து கடலூர் குழந்தைகள் நல காப்பத்திற்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிறந்து ஒரே நாளான பச்சிளம் குழந்தையை வயல்வெளியில் வீசி சென்றவர் யார்? கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் குழந்தையை அதன் தாய் விட்டு சென்றாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள கிராம மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

born in baby Cuddalore threw the child in the field


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->