அப்பாவுக்காக திருடினேன் - போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்.!  - Seithipunal
Seithipunal


அப்பாவுக்காக திருடினேன் - போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்.! 

சென்னை கோயம்பேடு பழ சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஷட்டர் பூட்டை உடைத்து, பணம் மற்றும் செல்போன்கள் திருடு போயுள்ளது.

இது தொடர்பாக வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சிறுவன் ஒருவன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இந்த நிலையில், போலீஸார் நேற்று அதிகாலை மார்க்கெட் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவனை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், திருவள்ளூர் அடுத்த செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவன் தான் மார்க்கெட் பகுதியில் திருடியுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், "கை,கால்கள் இயங்காத நிலையில், உடல் நலம் பாதித்த அப்பா மட்டும் வீட்டில் இருக்கிறார். அவரை காப்பாற்றுவதற்காக ஒன்பதாம் வகுப்பு படித்த போது, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை செய்வதற்கு முடிவெடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து வேலை கேட்டுள்ளான். 

சிறுவன் என்பதால் வேலை கொடுப்பதற்கு வியாபாரிகள் தயங்கினர். இதனால், அப்பாவை காப்பாற்ற கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடைகளின் பூட்டை உடைத்து திருடியுள்ளான். வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அசந்து தூங்குவதை பயன்படுத்தி, அவர்களது செல்போன், பணம் உள்ளிட்டவற்றையும் அவன் திருடியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் அந்த சிறுவனிடம் இருந்து ஆறு செல்போன்களை பறிமுதல் செய்து, கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். தந்தையை காப்பாற்ற திருட்டில் ஈடுபட்ட சிறுவனின் செயல் காவலர்களை அதிர்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy arrested for theft in koyambedu fruit market


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->