சேலம் மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மனைவி வெண்ணிலாவுக்கு கடந்த 5-ந் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தை மற்றும் மனைவியை தங்கதுரை மற்றும் அவருடைய மாமியார் இந்திரா ஆகியோர் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் தங்கதுரை நேற்று காலை வெளியில் சென்ற நேரத்தில் தனியாக இருந்த இந்திராவிடம் 30 வயது பெண் ஒருவர் பேச்சு கொடுத்து, குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருப்பதால் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருக்கலாம் என்று கூறி குழந்தையை கண் மருத்துவரிடம் சென்று காண்பித்து வரலாம் என்று இந்திராவை அழைத்தார்.

இதை உண்மை என நம்பிய இந்திரா, அந்த பெண்ணுடன் குழந்தையைத் தூக்கிச் சென்று  கண் மருத்துவரிடம் குழந்தையை காண்பித்துள்ளனர். பின்னர் அந்த பெண், இந்திராவிடம் நான் குழந்தையை வைத்து கொள்கிறேன் நீங்கள் சென்று மருந்து வாங்கி கொண்டு வாருங்கள் என்று கூறியதையடுத்து இந்திரா குழந்தையை குடுத்துவிட்டு மருந்து வாங்க சென்றார்.

ஆனால், திரும்பி வந்து பார்த்த போது குழந்தையுடன் அந்த பெண் மாயமானதை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் இந்திரா மற்றும் அவரது உறவினர்கள் புகார் கொடுத்ததன்பேரில் போலீசார் விரைந்து சென்று மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில் முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கி கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடியதையடுத்து தற்போது அந்தப் பெண் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தையைக் கடத்திய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy baby rescue kidnape from salem govt hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->