தூத்துக்குடியில் பயங்கரம்... வீட்டிலிருந்த சிறுவன் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவருடைய 2-வது மகன் கருப்பசாமி, அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அம்மை நோய் பாதிப்பு இருந்ததால் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இதற்கிடையே கார்த்திக் முருகனும், அவரது மனைவியும் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டதனால், கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், திடீரென கருப்பசாமி வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார். வேலைமுடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத்ததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கருப்பசாமியை தேடி வந்த நிலையில், நேற்று காணாமல் போன சிறுவன் கருப்பசாமி, இன்று பக்கத்து வீட்டு மாடியில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். 

உடனே பெற்றோர் சிறுவன் கருப்பசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், சிறுவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் காணாமல் போயுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy body found in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->