கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆக நினைத்த காதலன்.. காவல் நிலைய வளாகத்தில் அரங்கேறிய சம்பவம்.!
Boy cheat and pregnant to women in kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஜா. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து ரோஜாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த பாண்டித்துரை அவரிடம் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதில் ரோஜா மூன்று மாத கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் பாண்டித்துரை எனது குடும்பத்தினருக்கு உன்னை பிடிக்கவில்லை என்று ரோஜாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் இரு தரப்பினரும் விசாரணை மேற்கொண்டு திருமணம் செய்தால் மட்டுமே அவர்கள் புகாரினை வாபஸ் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அதன் பின்னர் பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றனர்.
English Summary
Boy cheat and pregnant to women in kanchipuram