திருமண ஆசைகாட்டி பட்டதாரி பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


திருமண ஆசை காட்டி இளம்பெண்களை ஏமாற்றிய வாலிபர் கை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் ஒரிச்சேரி புதூர் மேற்கு அண்ணாநகர் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மோகனசுந்தரம் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 2014  ஆம் ஆண்டு மோகனசுந்தரம் பட்டதாரி பெண் ஒருவருக்கு தனது நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகனசுந்தரம் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மோகனசுந்தரம் திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் திருமணத்தை பற்றி பேசும்போது மோகனசுந்தரம் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகனசுந்தரி கைது செய்து செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வாலிபருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் மூன்று லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy cheat and sexual abuse working girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->