அறுவை சிகிச்சை கருவிகளை சுத்தம் செய்த சிறுவன் - அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம்.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையின் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

அங்கு அவருக்கு காலில் இருந்த ஒரு விரலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் பவுள்ராஜ்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட பழைய கட்டை அவிழ்த்துவிட்டு, புதிதாக கட்டு கட்டியுள்ளனர். 

பின்னர், அவர்கள் அறுவை சிகிச்சை கருவிகளை பவுல்ராஜின் படுக்கை அருகே வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதனை, பவுல்ராஜ் தனது மகனை விட்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். 

அதன் படி அந்த சிறுவனும் கழிவறைக்கு சென்று அறுவை சிகிச்சைக் கருவிகளை சுத்தம் செய்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானாதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy clean surgery equipments in thoothukudi govt hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->