தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தானம்பட்டியில் திம்மராயசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன்(வயது12) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 இந்த நிலையில் சாந்தன் அப்பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died after falling from a coconut tree


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->