#சேலம் || டிவி ஆஃப் செய்த சிறுவனின் தலையை சுத்தியலால் பதம் பார்த்த தாய் மாமன் கைது! - Seithipunal
Seithipunal


தலைமறைவாக இருந்த தாய் மாமனை சுற்றி வளைத்த போலீஸ்!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுவனின் தந்தை சாலை விபத்தில் உயிரிழக்க அவருடைய தாயுடன் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் சிறுவனின் தாய் மாமனும், தாத்தாவும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவனின் தாய் மாமன் மனோஜ்குமார் டிவி பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது லேப்டாப்பில் கேம் விளையாடியதை மாமா கண்டித்ததால் கோவத்தில் இருந்த அந்த சிறுவன் திடீரென டிவியை ஆஃப் செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தாய் மாமன் மனோஜ்குமார் அருகே இருந்த சுத்தியலை எடுத்து சிறுவனின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வழக்குபதிவு செய்த போலீசார் தப்பியோடிய சிறுவனின் தாய் மாமன் மானோஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோபத்தால் ஒரு நொடி நிதானமாக யோசிக்காமல் தாய்மாமன் மனோஜ்குமார் சிறுவன் மண்டையை உடைத்த சம்பவத்தில் அச்சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy head hit with hammer after turning off TV in Salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->