சென்னையில் பயங்கர விபத்து - ஒருவர் பலி! தாறுமாறாக கார் ஒட்டிய எம்பி மகள் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை பெசண்ட் நகரில் விபத்தில் இளைஞர் பலியான சம்பவத்தில் ஆந்திர மாநில எம்.பி., மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெசண்ட் நகரில் இன்று காலை தாறுமாறாக ஓடிய கார் ஏறி, நடைபாதையில் உறங்கிய பெயிண்டர் சூர்யா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காரை ஓட்டி வந்தது ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. பீடா மஸ்தான் ராவ்-ன் மகள் பீடா மாதுரி என்பது விசாரணையில் தெரியவந்தது. 

தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்த அவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் எம்.பி. பீடா மஸ்தான் ராவ்-ன் மகள் பீடா மாதுரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking News Chennai Accident Police Arrest MP Daughter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->