இனி கடுமையான தணடனை! சட்ட திருத்தம் செய்ய முடிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Breaking News TNAssembly 2024 CM Stalin announce New Law
மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா, சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றே தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,746 குடியிருப்புகள், ₹1,146 கோடி செலவில் மறு கட்டுமானம் செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை உட்பட பல நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்து மறு கட்டுமானம் செய்யப்படும். சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அடுத்த 3 ஆண்டுகளில் சீரமைக்கப்படும் என்றும் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 4,581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு:
* சென்னையில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டுகளிடம் இருந்து 10.96 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
* 2024ம் ஆண்டில் கள்ளச்சாராயம் தொடர்பாக 4968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* 2023ம் ஆண்டில் தமிழகத்தில் 3067 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன.
* 2023ம் ஆண்டில் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 4581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* சென்னையில் 2023 - 24ம் ஆண்டில் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்ற 1330 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Breaking News TNAssembly 2024 CM Stalin announce New Law