" ரூ.7000 இல்லனா ; ரூ.2000 கொடுங்க "வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்! வருவாய் ஆய்வாளர் கைது!!
Bribe to issue heir certificate Revenue inspector arrested
திருப்பூர் மாவட்ட நல்லூர் நில வருவாய் அலுவகத்தில் ஆய்வாளராக மைதிலி என்பவர் ரங்ககவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.7000 லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், பொறி வைத்து வருவாய் ஆய்வாளர் மைதிலியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.
திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையத்தை அடுத்த ரங்ககவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. கடந்த பிப்ரவரி இவரின் தந்தை ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார். முதல்வரின் நிவாரண நிதியை பெறுவதற்க்காக நல்லூர் நில வருவாய் அலுவகத்தில் விண்ணப்பித்துள்ளார்.விண்ணப்பத்தை அங்கீகரித்து வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் ஆய்வாளர் மைதிலி ரூ.7000 லஞ்சம் கேட்டுள்ளார்.
அதற்கு ஜீவா, காய்கறி வியாபாரம் செய்யும் என்னால் அவ்வளவு பணத்தை தரமுடியாது என கூறிவுள்ளார். சான்றிதழ் வேண்டுமென்றால் ரூ.2000 தருமாறு வருவாய் ஆய்வாளர் மைதிலி கேட்டுள்ளார். இதனை அடுத்து ஜீவா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில்,லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கெளசல்யா தலைமையில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை வழங்கி வருவாய் ஆய்வாளர் மைதிலி கொடுக்குமாறு கூறிவுள்ளனர். அதனை அடுத்து ஜீவா ரசாயனம் தடவப்பட்ட நோட்டுகளை குடுத்துவிட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருவாய் ஆய்வாளர் மைதிலியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
English Summary
Bribe to issue heir certificate Revenue inspector arrested