மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி.. மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


முன்விரோதம் காரணமாக அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம, பனங்காட்டு தெருவைச் சேர்ந்த குமார். இவர் அவரது தம்பி வீராச்சாமியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நண்பர் வினோத் என்பவருடன் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது, சசோகதர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கடப்பாரையால் வீராச்சாமி குமாரை தாக்கியதில் அவர் பலத்தகாயமடைந்தார்.அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வீராசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம்  அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother Kills His Elder Brother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->