ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு! முக்கிய புள்ளிகளுக்கு செக்! வழக்கு முடியும் வரை ஆப்பு! அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 5-ம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, விசாரணை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞரும், முக்கிய நிர்வாகியுமான அஸ்வத்தாமன் என்பவர்தான், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணம் என்றும், சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வழக்கறிஞர்கள் ஹரிகரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகிய நான்கு பேருக்கும் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முடியும் வரை நான்கு பேருக்கும் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong Case Update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->