ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் - பள்ளி தாளாளர் கைது! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விவகாரத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், தற்போது வரை 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

மேலும் அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

இதற்கிடையே கடந்த வாரம் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. இதனை அடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

அதே சமயத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சதீஷ்குமார் என்ற பெயரில் வந்த அந்த மிரட்டல் கடிதத்தை, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவர் தான் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்து செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இதில் சதீஷ் என்பவரை பழிவாங்க அருண்ராஜ் இந்த கொலை மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு வழக்கில் அருண் ராஜ்ஜுக்கு எதிராக சதீஷ் சாட்சியம் சொன்னதால், அவரை பழி தீர்க்கவே பரபரப்பாக பேசப்பட்டு பேசப்பட்டு வரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி, அவரை சிக்க வைக்க இது போன்று அருண்ராஜ் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong Family Death Threat Police Arrest 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->