பரபரப்பு! ஆம்ஸ்ட்ராங் குழந்தைக்கு ஆபத்து! கொலை மிரட்டல் - துப்பாக்கி ஏந்திய போலீசார்!  - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் ஐந்தாம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தன. இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

தற்போது வரை இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பழிக்கு பழி கொலை சம்பவம் நடைபெறாமல் இருக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி, அவரது குடும்பத்தை கொலை செய்ய உள்ளதாக கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த மிரட்டல் கடிதம் காரணமாகவே தற்போது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி திருமதி ஆம்ஸ்ட்ராங்கிற்கு (பொற்கொடி)  பதவி வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Armstrong Family police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->