கதிகலங்கும் சென்னை! ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாளை இறுதி சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


சென்னை : படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை மாலை இறுதி சடங்கு நடைபெறும் என பகுஜன் சமாஜ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக பணியாற்றியவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது சாப்பாடு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேடத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மரியாதை செலுத்த பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி நாளை சென்னை வருகிறார்.

இந்தநிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Tamil Nadu President Armstrong body will be cremated tomorrow evening


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->