திடீர் திருப்பம்! ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ஸ்கெட்ச் போட்ட இடத்தில் போலீஸ்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய இடங்களில் குற்றவாளி அருளுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு பட்டினபக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை குற்றவாளிகள் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் என்ற குற்றவாளியை போலீசார் சமீபத்தில் என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு சர்ச்சைகளும் விழுந்தன. அதனைத் தொடர்ந்து ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சத்  தலைமையில் சென்னையில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அதனையடுத்து ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவை சேர்ந்த மலர்கொடி, ஹரிஹரன், திமுகவைச் சேர்ந்த அருள், தாமாகவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக போலீஸ்காவலில் கைது செய்யப்பட்ட திமுக வழக்கறிஞர் அருளை போலீசார் தனியாக அழைத்து சென்று  கொலைக்கான சதி திட்டம் தீட்டிய இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bsp Tamil Nadu President Armstrong plot to kill police intensive investigation with the accused Arul


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->