பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தனம் இரவு எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கொலை செய்த குற்றவாளிகள் எட்டு பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்கள் முன்விரதம் காரணமாக கொலை செய்தது, அவர்களின் வாக்குமூலம் மூலம் அம்பலம் ஆகியது.

இந்த படுகொலை சம்பவத்திற்கு அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளும், தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வந்துள்ளார்.

இன்று காலை உத்தரப் பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மாயாவதி, சாலை மார்க்கமாக பயணம் செய்து, பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார். மாயாவதியின் வருகையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இயக்குனர் வெற்றிமாறன், பா ரஞ்சித், விசிக தலைவர் திருமாளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSParty Mayawati Armstrong Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->