ஓட்டுநர் மயங்கி விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், விபத்தில் 38 பேர் படுகாயம் !! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 7 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் காயமடைந்தனர்.

இந்த அரசு பேருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பயணத்தின் தொடக்கத்தில், முருகபூபதி டிரைவராகவும், பிரதீப் நடத்துனராகவும் இருந்து உள்ளனர். பிறகு, திங்கள்கிழமை அதிகாலை பேருந்து திருமங்கலம் வந்தடைந்தவுடன், பிரதீப் டிரைவராகவும் முருகபூபதி நடத்துனராகவும் மாறி மாறி பணி செய்தனர்.

இதில், காலை 5.15 மணியளவில், பிரதீப் தூக்க கலக்கத்தில் கண்கள் சொக்கி விழுந்துள்ளார் இதனால் வாகனம்  கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு பேருந்து பாலத்தின் தடையில் மோதி கவிழ்ந்து, கீழே குழிக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் கொண்டு சென்று உள்ளனர், இந்த சம்பவத்தில் பெண் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஓட்டுநர் பிரதீப் மீது ஐபிசி 279, 337, 338 மற்றும் 304 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "சில பயணிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர், மற்றவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்" என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus accident due to driver faint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->