வருங்கால தமிழக முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்.!
bussy anand poster controversy in chenai
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதன் படி தவெக சார்பில் சட்டசபை தேர்தலை கூட்டணி வைத்து சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து இன்று பொதுக்குழு கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை 9 மணிக்கு கூடும் இந்த பொதுக்குழு கூட்டத்தையொட்டி திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையம் முழுவதும் கட்சியின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகிக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில்
11 தீர்மானங்கள் வாசிக்கப்பட உள்ளது.
கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் இடம் பெற உள்ளது. இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்தை வருங்கால முதலமைச்சர் என்றுக் கூறி சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் போஸ்டரில் மதிப்புமிகு தளபதி அவர்களை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசாம் தவெக பொதுச்செயலாளர்.. வருங்கால தமிழக முதலமைச்சர் அவர்களே வருக! வருக!! வருக!!! என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் ஈ.சி.ஆர். சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தவெக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கூறுகையில், "அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; வேறு கட்சியை சார்ந்தவர்கள் யாராவது இதை செய்து இருக்கலாம்; வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்; முதுகில் குத்தும் வகையில் இப்படி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
English Summary
bussy anand poster controversy in chenai