தூத்துக்குடியில் பரபரப்பு!...இலங்கைக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் பீடி இலை மூட்டைகள் கடத்தல்!....தப்பியோடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை மூட்டைகள் கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


தொடர்ந்து ரகசிய தகவலின் பேரில் நள்ளிரவு நேரத்தில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்த போது, அதில் 30 கிலோ எடை கொண்ட 42 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மினி லாரி மூலம் பீடி இலை மூட்டைகளை கொண்டு சென்று, இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரிய வந்ததை அடுத்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Busy in Tuticorin Sri Lanka Rs.15 lakh worth of bedi leaf bundles smuggled Police set a net for the fugitives


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->