தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் பழங்கால புத்தர் சிலை மீட்பு.!! - Seithipunal
Seithipunal


தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் பழங்கால புத்தர் சிலை மீட்பு.!!

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் மீனவர்கள் வழக்கமாக மீன்பிடித்து வந்தனர். அதன்படி நேற்று அதிகாலையும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 

அப்போது ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் 4 அடி உயரத்தில் கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை இருந்துள்ளது. இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜிடம் தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின் படி சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிலையை பார்வையிட்டனர். 

அதன் பின்னர் அதிகாரிகள் புத்தர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே புதைக்கப்பட்டு இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்,
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

buththa statue rescue in thanjavur kollidam river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->