சட்டப்பேரவை அருகே அம்பேத்கருக்கு வெண்கல சிலை அமைக்கவேண்டும்.. மாணவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலையை வெண்கல சிலையாக மாற்றி தர வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அப்போது அந்த மனுவில் கூறியிருப்பதாவது :புதுச்சேரி மாநில சட்டப்பேரவை அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலை மிகவும் பழமை வாய்ந்த சிலையாக உள்ளதை தாங்கள் அறிவீர்கள் இச்சிலையை சுற்றி உள்ள பகுதிகளில் செடி,புத்து,  புதார்களுடன் காணப்பட்டதால் இப்பகுதியை சீர் செய்து   வெண்கல சிலை அமைத்து தர கடந்த 2024 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று பொதுப்பணித்துறை பொறியாளர் அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

எமது அமைப்பின் நியாயமான கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை தற்போது சிலை அமைந்துள்ள பகுதியை மேம்படுத்த முடிவெடுத்துள்ளதாக எமது அமைப்புக்கு துறை சார்பாக தகவல் தெரிவித்துள்ளனர் ஆனால் ஏற்கனவே இருந்த புரட்சியாளர் ஐயா அவர்களின் திருஉருவச் சிலையை மாற்றி வெங்கல சிலையாக 
மாற்றுவதற்கு உத்தரவு வரவில்லை என்ற செய்தி அறிந்தோம்

தற்போது  அமைக்கப்பட்டுள்ள புரட்சியாளர் அவர்களின் சிலை பழுதடைந்த நிலையில் உள்ளதை தாங்களும் அறிவீர்கள் என நம்புகிறோம் பலமுறை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை வலது கரத்தில் அணில் கூடு கட்டிய செய்தி கூட பத்திரிக்கையில் வந்துள்ளது தங்களுக்கு நினைவூட்டுகிறேன். புதுச்சேரி பேட்கோ நிர்வாகத்திடம் இரண்டு வெண்கல சிலைகள் உள்ளதாக அறிகிறோம். வருகின்ற ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர்  அவர்களின் பிறந்தநாள் இந்த நிகழ்வில் திட்டமிட்டுள்ளபடி சிலை அமைந்துள்ள பகுதியை அழகுபடுத்தி தருவதோடு வெண்கல சிலையையும் உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை எமது அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A bronze statue of Ambedkar should be installed near the Assembly Puducherry Union Territory Students Federation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->