தி.மு.க சார்பில் வைக்கப்பட்ட நீர்மோர் பந்தலுக்கு தீவைப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தி.மு.க மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த நீர் மோர் பந்தலுக்கு நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் நீர்மோர் பந்தல் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க மாவட்ட நெசவாளர் அணி தலைவர், திமுக நிர்வாகி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 

இதனை அடுத்து தி.மு.க நிர்வாகிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோடை காலத்தில் பொது மக்களின் தாகத்தை தணிக்க தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Buttermilk pandal set fire mysterious persons


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->