சென்னை மருத்துவமனையில் வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 25ம் தேதி மதிமுக நிர்வாகி ஒருவரின் மகள் திருமணத்திற்காக நெல்லை சென்றிருந்த வைகோ, அங்கு அவரது சகோதரர் வீட்டில் தங்கியிருந்தபோது கால் தடுமாறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக வைகோ நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்ததால், தூத்துக்குடி விமானம் நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார் வைகோ. தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வைகோ.

அங்கு மீண்டும் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மே 29ம் தேதி வைகோவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது வைகோ குணமடைந்து வருகிறார்.

 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவை நேரில் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து வைகோ வீடு திரும்பிய பிறகு கட்சியினர் அவரை சந்திக்க்கலாம் என்று துரை வைகோ கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

C M Meets and Inquired Vaikos Health in Chennai Apollo Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->