வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேர பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக 1984-ஆம் ஆண்டு குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இணைக்கப்பட்ட பெருமையும், அதிக இழுவைத் திறன் கொண்ட என்ஜின் இணைக்கப்பட்டதும் இந்த ரயிலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தற்போது, இந்த ரெயிலை அறிமுகம் செய்து 47 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவுரவிக்கும் விதமாக, ரெயில் இன்ஜினுக்கு பூமாலை, சாம்பிராணியோடு தேங்காய் மற்றும் பழங்களோடு சூடம் பத்தி கொண்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

தொடர்ந்து ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், ரெயில்வே எக்ஸ்பிரஸில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cake cutting to vaikai express in madurai for 47th anniversary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->