அரசு மருத்துவமனையில் பெண் செவிலியரின் கழிவறையில் ரகசிய கேமரா - கையும் களவுமாக சிக்கிய பயிற்சி மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உடுமலை சாலையில் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். 

அவர்களுக்கு மருத்துவமனையில் கழிப்பறை வசதி தனியாக உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கழிப்பறைக்கு சென்ற பெண் செவிலியர் ஒருவர், அங்கு பிரஷ்ஷில் ரப்பர் பேண்டால் கட்டப்பட்ட பேனா வடிவிலான கேமரா ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலரிடம் தகவல் தெரிவித்தார். அவர், உடனடியாக மருத்துவமனை கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த பிரஷ்ஷில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ரகசிய கேமராவை வைத்தது யார்? என்று விசாரணை நடத்தியதில், மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு எம்எஸ் ஆர்த்தோ பயிற்சி மருத்துவராக பணியாற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

camera fixed nurse bathroom in pollachi government hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->