தமிழகம்: கஞ்சா போதையில் மயங்கிய மாணவர்கள்! என்ன நடக்கிறது என அதிர்ச்சியில் பெற்றோர்! - Seithipunal
Seithipunal


உயர்நிலைப் பள்ளி படிப்பில் கூல்லிப்! மேல்நிலைப் பள்ளி படிப்பில் கஞ்சா!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு சந்திரகுமார் பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர்.

இவர் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்த போது உயர்நிலைப் பள்ளி வகுப்பு படிக்கும் மாணவர்கள் "கூல்லிப்" என்ற வஸ்துக்களையும் 11ம் வகுப்பு மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தலைமையாசிரியர் விசாரணையில் இறங்கினார். அப்பொழுது 11ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 11 பேர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது கண்டறிந்து பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்நிலையில் கஞ்சா வியாபாரிகள் வந்து செல்லும் ஆள் நடமாட்டம் மற்ற பகுதியில் மாணவர்கள் மயங்கி கிடந்துள்ளனர். கஞ்சா வியாபாரிகள் மீண்டும் மாணவர்களை மூளைச்சலவை செய்து கஞ்சாவை விற்பனை செய்துள்ளனர். 

இத்தகவல் ஆனது ஒன்றிய சேர்மன், உள்ளாட்சி பிரதிநிதி, தலைமை ஆசிரியர் மற்றும் போலீசருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பார்த்ததும் சில மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அவர்கள் ஏழு மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மீண்டும் சமூக விரோத செயலில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு பள்ளியின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கஞ்சா வியாபாரிகளை கூண்டோடு ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis dealers who brainwash students


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->