சென்னை விமான நிலையம் : பணிமனையில் தீப்பிடித்து எறிந்த கார்.!
car fire accident in chennai international airport
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பணிமனை உள்ளது. அங்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் வாகனங்களை பழுது பார்ப்பது மற்றும் சர்வீஸ் செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றது.
அதுமட்டுமல்லாமல், அங்கு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான பெட்ரோல் மற்றும் டீசல் நிலையமும் உள்ளது. இந்நிலையில் பணிமனைக்கு வந்த ஒரு கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில், காரின் பெட்ரோல் டேங்க் உடைந்து பெட்ரோல் கொட்டியதால் கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார் தீப்பிடித்து எரிந்த இடத்திற்கு அருகில் பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த பணிமனை ஊழியர்கள், உடனே சென்னை விமான நிலைய தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் முப்பது நிமிடம் போராடி காரில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை விமான நிலைய போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
car fire accident in chennai international airport