#BREAKING | எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு! உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரபரப்பு பதில்! - Seithipunal
Seithipunal


தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, அதிமுக சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து தொடர்பான விவரங்களை தவறாக தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இது குறித்து வருகின்ற 26 ஆம் தேதி அறிக்கை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி முன் ஆஜராகிய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவல்துறை இது குறித்து பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 6-ம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

அப்போது குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவசர கதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதற்க்கு நீதிபதி, இந்த விவகாரத்தை மேற்கொண்டு பெரிது படுத்த வேண்டாம் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against eps Chennai HC Ingo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->