ராமர் கோவில் திறப்பு விழா விடுமுறை - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.! - Seithipunal
Seithipunal


ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, வரும் 22ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு நாளை  கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணொலியில் காண புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் அரை நாள் விடுப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தthan padiyum, ஊழியர்களிடமிருந்து வந்த அதிகப்படியான கோரிக்கை காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல JIPMER மருத்துவர் கல்லூரிக்கும் விடுமுறையானது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file against holiday to jipmer hospital for ramar temple kumbabhishegam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->