அரவிந்த் கெஜ்ரிவால் படு தோல்வி..ஆம் ஆத்மி கட்சியினர் அதிர்ச்சி!
Arvind Kejriwals defeat Aam Aadmi Party shocked!
டெல்லியில் தற்போதைய முதல் மந்திரி ஆதிஷி , ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளார். கெஜ்ரிவாலே கடும் தோல்வியை இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதியில் துவக்கம் முதலே கெஜ்ரிவால் பின்னடவை சந்தித்தார்.அவரை எதிர்த்து போட்டி போட்ட பாஜகவின் பர்வேஷ் குமார் முன்னிலை பெற்றார். சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் கெஜ்ரிவாலுக்கு கடும் இழுபறியான நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியில் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். 2013- முதல் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்று வந்த கெஜ்ரிவால், பாஜகவின் பர்வேஷ்வெர்மாவிடம் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல டெல்லியில் தற்போதைய முதல் மந்திரி ஆதிஷி , ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.மேலும் கெஜ்ரிவாலே கடும் தோல்வியை இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாஜக தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், டெல்லியில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கு என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்கும் தயாராகி வருகிறார்கள்.
English Summary
Arvind Kejriwals defeat Aam Aadmi Party shocked!