பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு.. 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது!
Woman snatches gold chain. Four people, including two minors, have been arrested
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் செயின் பறித்த 2 சிறார்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து நகையைமீட்டு குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி பெரியகாலாப்பட்டு, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி விஜயக்குமாரி. வயது 57. காலாப்பட்டு பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி இரவு, வியாபாரத்தை முடித்துகொண்டு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் அடையாளம் தெரியாத இருவர் மறித்து, விஜயக்குமாரி கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு கணவரை மிரட்டி சென்றுள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 17 வயது சிறுவர்கள் இருண்டு பேர் பைக்கில் வந்து, செயின் பறித்து செல்வது தெரியவந்தது. அந்த சிறார்களை பிடித்து விசாரித்தபோது, பெரியக்காலாப்பட்டு, இ.சி.ஆர்., சாலை சூர்யா (எ) முருகன், செயின் பறிக்க திட்டமிட்டு கொடுத்ததும், பறிக்கப்பட்ட செயினை செல்லியம்மன் நகர், ராகுல்காந்தி தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மூலம் விற்பனை செய்ததாக தெரிவித்தனர்.
![](https://img.seithipunal.com/media/4ryyrrun-rlg34.png)
இதனையடுத்து, 2 சிறார்கள் மற்றும் சூர்யா, ராமமூர்த்தி ஆகியோரையும், போலீசார் கைது செய்து, 70 கிராம் தங்க நகை, 40 ஆயிரம் ரூபாயை மீட்டனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சூர்யா, ராமமூர்த்தி இருவரையும் காலாப்பட்டு சிறையிலும், 2 சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
English Summary
Woman snatches gold chain. Four people, including two minors, have been arrested