திருச்சியில் பரபரப்பு - விபச்சாரத்தொழில் நடத்திய பெண் - விசாரணையில் சிக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் பரபரப்பு - விபச்சாரத்தொழில் நடத்திய பெண் - விசாரணையில் சிக்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் லட்சுமி தேவி என்பவர் மேலாளராக இருந்து விபசாரம் செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் அங்கு இரண்டு பெண்களும் இருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்த போது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெறுவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த இரண்டு பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் மேலாளர் லட்சுமி தேவியைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ள செந்தில் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் என்றுத் தெரியவந்துள்ளது. அதன் பேரில் காவல்துறையினர் செந்தில் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on vijay makkal iyakkam excuetive in trchy for prostitution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->