அது டெபாசிட்..லஞ்சம் இல்லை! சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை - மா.சுப்பிரமணியம்! - Seithipunal
Seithipunal


சென்னை : எழும்பூர் அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்டதாக பரப்பிய தகவல் முற்றிலும் தவறானது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சிறுவனின் சகோதரிக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிக்கிச்சுக்காக ரூ. 1000 லஞ்சம் கொடுத்ததாக சிறுமியின் தந்தை தெரிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்ததாவது, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறானது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ. 1000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பின்னர் பரிசோதனைகள் தேவைப்பட்டால் அதற்கும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளன.

சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட தொழிலாளர் முகாமில் 625 குடும்பங்கள் வசிக்கிறது. மொத்தம் 1300 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

வேறு யாருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்ததற்கு காரணம் என்ன என்பது பரிசோதனை இறுதி அறிக்கையில்  தெரியவரும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case of the boy death sewage was not mixed with drinking water M Subramaniam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->