#Breaking : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்படுகிறது! - Seithipunal
Seithipunal


45 ஆயிரம் கன அடியிலிருந்து 55 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் நீர் திறப்பு!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றிலும் காவிரி ஆற்றிலும் இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரானது 45 ஆயிரம் கன அடி என்ற அளவில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி முதல் 55 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட உள்ளது. இந்த தகவல் நீர்வளத் துறையில் இருந்து சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதனால் காவேரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதியில் கால்நடைகளை மேச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கால்நடைகளை காவிரி ஆற்றில் குளிப்பாட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery flood warning level of water released from Mettur Dam is increased


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->