தொடர் மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெயது வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர் வறுத்து அதிகரித்தது. சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்த ஒகேனக்கல் பகுதியில் வினாடிக்கு 1000 கன அடி நீர் வரத்து இருந்து வந்தது. 

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, மைசூர் பகுதிகளில் பெய்த கன மழையால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பில்லிகுண்டுகலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் மாதாந்திர கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery water flow increased due to continue rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->