பொன் மாணிக்கவேல் முன்ஜாமின் வழக்கு! சிபிஐ-க்கு நீதிபதி கிடுக்குப்புடி கேள்வி!
CBI bail case Pon Manikavel
மாயமான பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்றம் நியமித்தது.
இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது, சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்திய புகாரில் திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட பொய் வழக்கு என்று, பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிஐ வழக்கு பதிவு செய்யக் கோரி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, பொன் மாணிக்வேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு செய்த நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ஐஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என்று சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மேலும், சிலை கடத்தல் வழக்கில் காதர் பாட்சாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்து உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா? அதற்கான ஆவணங்கள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பி இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி உத்தரவிட்டார்.
English Summary
CBI bail case Pon Manikavel